Pages

Saturday, May 9, 2020

பிறந்தநாள் வாழ்த்துக்கள்அம்மா



ஈரைந்து மாதங்கள் கருவில் சுமந்து
பற்பல வருடங்கள் நெஞ்சில் சுமந்து
எங்கள் மீதான அன்பினில் இன்றளவும்
குறைவின்றி எங்களுக்காக வாழ்ந்து வரும்
ஈடு இணையற்ற எங்களன்பு அன்னையே
இன்பம் துன்பம் குடிகொண்ட வேளையிலும்
உளமாற எம் சிரிப்பிலும் அழுகையிலும்
வாழ்வின் ஒவ்வொரு ஏற்ற தாழ்விலும்
எம்மை வாழ்வில் சிறந்திட நல்வழிப்பட
உற்ற துணையாய் உயிர்த் தோழியாய்
எம்மின் நிழல்போல் இணைந்தே வாழ்ந்திடும்
மேன்மை பொருந்திய ஆருயிர்த் தாயே
இரக்ககுணம் குடிகொண்டு வாழும் தங்கள்
இருதயத்தில் இளகிய மனதிற்கு பஞ்சமேது
பசியென்று வரும் வறியவர் அனைவரின்
வயிற்றுப்பசி நீங்கி உள்ளமும் நிறைந்து
உற்சாகத்துடன் தம்நாமம் தழைக்க வாழ்த்தினை
பெறுவது மட்டுமன்றி தர்மங்கள் செய்திடும்
உங்களுடைய சிறப்பான மனதை போன்று
உங்களுடைய பிறந்தநாளும் இனிதாக அமைய
மனதார உளமாற வாழ்த்தி பிரார்த்திக்கின்றோம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்அம்மா
நொடியின்றி நோய் நலமுடன் வாழ்க !!!

என்றென்றும் அன்புடன், சுபத்

No comments:

Post a Comment