Pages

Saturday, May 9, 2020

அன்னையர் தின வாழ்த்துக்கள்


உயிரென்னும் கருவிற்கு
உருவம் தந்திட்டாய் ...
அதற்கு சுகமான
தாய்மடி தந்திட்டாய் ...
நிறைமாதம் வரையிலும்
சிரமங்களை அனுபவித்தாய் ...
சுகமான சுமையெண்ணி
இன்முகம் பூத்திட்டாய் ...
மறுஜென்மம் எடுத்து
என்னை ஈன்றிட்டாய் ...
வலியெடுத்து ஈன்றபின்னரும்
மகிழ்ச்சி கொண்டாய் ...
உதிரத்தை பாலாக்கி
என்னுயிர் வளர்த்திட்டாய் ...
கண்ணின் விழியாய்
உறங்காமல் காத்திட்டாய் ...
பசியை மறந்திட்டு
பகலிரவு காவல்காத்தாய் ...
என்பிஞ்சு விரல்தனை
தம்கரம் பிடித்திட்டாய் ...
உச்சிமுகர்ந்து அள்ளியணைத்து
முத்தங்களை பரிசளித்தாய் ...
என்னின் சுகதுக்கத்தில்
கைகோர்த்து நிற்கிறாய் ...
எனைநினைத்து இன்றளவும்
ஓய்வின்றி உழைக்கின்றாய் ...
ஏனையீன்ற நடமாடும்
தெய்வத்திற்கு பிறவிப்பயனாய் ...
என்றென்றும் சிரம்தாழ்ந்து
பொற்பாதம் பணிந்திட்டு
மகிழ்வுடன் உரைத்திடுவேன்
மனதில் சிறுகர்வம் கொள்வேன்
உலகிற்சிறந்த தாய் நீயென்று
அன்னையர் தின வாழ்த்துக்கள்💐

 - சுபத்ரா நாராயணன் -

No comments:

Post a Comment