காவிரி டெல்டா மாவட்டத்தின்
விவசாய குடும்பத்தின் மகளான
என் உணர்வுகளின் சிறு காணிக்கை!!!
வாழ்வென்ற ஒன்று உண்டெனில்
சாவென்று ஒன்று உண்டென்பதை
உணரா மக்களாத் தமிழர்கள்???
வெறும்
போட்டியென்று நினைத்தாயா...!!!
போட்டி போட்டு வந்த தமிழர்களின் வீரம்
மற்ற நாடுகளிலே இது காளைப்போர்
எங்கள் ஊரிலே
ஏறுதழுவல்(சல்லிக்கட்டு)
வாழையடி
வாழையாய் வழிவந்த வழக்கம்
இடையிலே நிறுத்த உனக்கென்ன விருப்பம் ?
உயிரினும் மேலானதாய் உதிரத்தில் கலந்திட்ட
தமிழர் மரபினை
மறந்திட வேண்டுமென்னும்
திடுக்கிடும் சட்டத்தினில்
திகைத்து நின்று
கவலையோடு கண்ணீர்விட்டுக் கதறியழ
கோழைத் தமிழர்களா நாங்கள்!!!?
கடல் கடந்து வாழும் உலகத்தமிழ் மக்களின்
ஒட்டுமொத்த உரிமைக்குரலின் பிரதிபலிப்பாய்...
தமிழரின் வீரத்தை பறைசாற்றும்
பழம்பெருமைகளில் ஒன்றான ஜல்லிக்கட்டைத்
தடைகளைத் தகர்த்து தவிடுபொடியாக்கி
தொடர்ந்து நடத்தி சிறப்புற்று வாழ
எங்கள் தமிழ் நண்பர்களின் உளமார்ந்த
முயற்சியின் சிறு அடையாளமாய்...!!!
ஒட்டுமொத்த உரிமைக்குரலின் பிரதிபலிப்பாய்...
தமிழரின் வீரத்தை பறைசாற்றும்
பழம்பெருமைகளில் ஒன்றான ஜல்லிக்கட்டைத்
தடைகளைத் தகர்த்து தவிடுபொடியாக்கி
தொடர்ந்து நடத்தி சிறப்புற்று வாழ
எங்கள் தமிழ் நண்பர்களின் உளமார்ந்த
முயற்சியின் சிறு அடையாளமாய்...!!!
அமெரிக்காவின் சிகாகோ மாகாணம்...
சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுக்கு மட்டுமல்ல…
ஜல்லிக்கட்டுத்தடைக் கோரி தமிழ் முரட்டுக்காளைகளின்
உரிமைக்குரலால் இனி ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களின்
உள்ளத்திலும் எண்ணத்திலும் நிலைக்கட்டும்...!
சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுக்கு மட்டுமல்ல…
ஜல்லிக்கட்டுத்தடைக் கோரி தமிழ் முரட்டுக்காளைகளின்
உரிமைக்குரலால் இனி ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களின்
உள்ளத்திலும் எண்ணத்திலும் நிலைக்கட்டும்...!
- குன்னலூர் சுபத்ரா நாராயணன்-
( KunnaLur Subathra Narayanan)
( KunnaLur Subathra Narayanan)
No comments:
Post a Comment