கட்டுப்பாடின்றி சுற்றித் திரியும்
வண்ணமிகு பூச்சியே!
சொல்லித்தான் தெரியவேண்டுமோ
நீ கொள்ளை அழகென்று...
எத்தனை எத்தனை வண்ணங்கள்
உன் இனத்தினிலே...
நீ ஒவ்வொன்றும் ஒருவிதம்
கண்ணைக் கவரும் உன் துடிப்பினில்...
நான் முற்றிலும் பரவசமடைந்தேன்!
வட்டமடித்து பறக்கும் உந்தன்
வித்தையினிலே நான் கிறங்கிப்போனேனே!
ஒரு சொட்டு தேனைச் சேகரிக்க
அப்பப்பா நீ படும்பாடு சொல்லி மாளுமோ!
உன் பசி தீர்க்க எத்தனையெத்தனை
மலர்களை வட்டமிடுகிறாய்...
உன்னை உற்று நோக்கிட்ட
அந்தவொரு நிமிடங்களில் உணர்ந்துகொண்டேன்
வாழ்கையின் உன்னதம் என்னவென்று!!!
No comments:
Post a Comment