Pages

Monday, February 16, 2015

The range of male-female friendship/ஆண் பெண் நட்பின் எல்லை

ஆண் பெண் நட்பின் எல்லை

  • ஆண் பெண் நட்பில் எல்லை எதுவரை?
  • ஆணும் ஆணும் பழகும் நட்பானாலும், ஆணும் பெண்ணும் பழகும் நட்பானாலும் அதற்கு எல்லை அவசியமா?
  • நட்பில் எல்லை வகுத்துக்கொள்வது அவசியமா? எல்லைகள் தங்கள் பாதுகாப்பிற்காகவா?

நட்பில் எல்லைகள் பழகுபவர்களைப்பொறுத்து வகுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறதுநல்ல நண்பனாக நினைத்திருந்தேன், ஏமாத்திட்டான். நண்பர்கள் சேர்ந்து பிசினஸ் ஆரம்பிச்சோம், கடைசியில் அவன் ஏமாத்திட்டான்.இத்தனை வருசமா நண்பனா இருந்தோம், அவன் என்னை சந்தேகப்படுறான். அவனுக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறேன், ஆனா எனக்குன்னு ஒண்ணு வந்தப்போ அவன் உதவி செய்யல. என பலப்பல குறைகளைச்சொல்லி வருத்தப்படும் நண்பர்களை அன்றாடம் பார்க்க நேரிடும் போது நட்பில் எல்லைகல் அவசியம் என்பது தெரிகிறது.அந்த எல்லை எதுவரை என்பது ஒவ்வொருவரையும் பொறுத்து வேறுபடும்.
நட்பிற்குல் எல்லை மிகவும் அவசியம்! 

ஆண் - பெண் நட்பிற்கு கண்டிப்பாக எல்லை வேண்டும். நம் நட்புதூய்மையாக இருந்தாலும், சமூகத்தின் பார்வைக்கு பயந்தே எல்லைகளைவகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பெண்கள் ஆண்களுடன் பேசும் போது எல்லைகளை வகுத்துக்கொள்வது அவசியம்.... நட்பு என்பது இன்றியமையாத ஒன்றாகிப் போய்விட்டது.... நட்பு இல்லாத மனிதன் இருப்பது சாத்தியமே இல்லை... ஒருவனுக்கு பிடிக்கும் விசயம் இன்னொருவனுக்கு பிடிக்காத போது தன் விருப்பையோ அல்லது வெறுப்பையோ இன்னொருவன் மீது திணிக்காமல் இருப்பது அவசியமாகிறது... எனவே எல்லையை வகுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது...

நட்பு மட்டும் இல்லை எந்த உறவிலும் கூட எல்லைகளை வகுத்துக் கொள்வது அந்த உறவு பலப்படவும் தொடர்ந்து உடன் வரவும் உறுதுணை புரியும்....
ஆணும் ஆணும் நட்பாக இருக்கும் போது வரும் பிரச்சனைகளை காட்டிலும் ஆணும் பெண்ணும் நட்பாய் இருப்பதில் மிக அதிக கவனம் தேவைப்படுகிறது... அதுவே தற்காத்துக் கொள்ளவும் உதவுகிறது.... அந்த நட்புக்கான எல்லை எதுவரை என்பது ஒருவருக்கு ஒருவர் வேறுபடும்.


ஆண் - பெண் நட்பிற்கு கண்டிப்பாக எல்லை வேண்டும். நம் நட்பு
தூய்மையாக இருந்தாலும், சமூகத்தின் பார்வைக்கு பயந்தே எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பழகுபவர்களின் தன்மையறிந்து எல்லைகள் மாறுபடலாம். காலம் கூட நட்பின் எல்லையை மாற்றிவிடும். பாதுகாப்பு, குடும்ப சூழல், காலத்தின் கட்டாயம் இவற்றைக் கருதி நிம்மதியான வாழ்க்கைக்கு எல்லைகள் அவசியமே. நல்ல நட்பு எல்லைகளைப் புரிந்துகொண்டு இறுதி வரை தொடரும்.

No comments:

Post a Comment